ஆட்டுக்குட்டியின் இரத்தம்.
இன்றைய தியானம்
ஆட்டுக்குட்டியின் இரத்தம்.
அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது, இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான். மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். – வெளிப்படுத்தின விசேஷம் 12:10-11
சாத்தானை குறித்து தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது அவன் குற்றம் சாட்டுகிறவன். இரவும் பகலும் நம் மேல் குற்றம் சாட்டுகிறவன். நம்முடைய பாவங்களை தேவன் மன்னித்துவிட்டார் என்ற சத்தியத்தை மறைத்து நாம் பாவி என்று சொல்லி நம்மை ஏமாற்றுகிறவன். நம்முடைய பாவங்களை தேவன் மன்னிக்கவில்லை எனவே நம்முடைய ஜெபங்களை தேவன் கேட்கமாட்டார் என்று நம்மை குறித்து குற்றஞ்சாட்டுகிறவன். தேவனுக்கு முன்பாக குற்றஞ்சாட்டுகிற சாத்தானை ஜெயிக்கும் ஒரே காரியம் ஆட்டுக்குட்டியின் இரத்தம். இயேசு கிறிஸ்துவே உலகத்தின் பாவத்தை சுமர்ந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி. மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. (யோ 1:29)
(குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
(கொலோ 1:14)
கல்வாரி சிலுவையில் இயேசு கிறிஸ்து நம்மை பாவத்திலிருந்து முற்றிலும் மீட்கும்படி அவருடைய இரத்தம் விலைகிரயமாக சிந்தப்பட்டது. உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
(1பேதுரு 1:18-19)
நாம் சாத்தானை ஒருபோதும் நம்முடைய சொந்த பெலத்தினால் மேற்கொள்ள முடியாது. இந்த உலகமக்களின் பார்வைக்கு நாம் பலசாலியாக இருக்கலாம், நாம் அந்தஸ்தில் பெரியவர்களாக இருக்கலாம், ஆனால் அதன் மூலம் நாம் சாத்தானை மேற்கொள்ள முடியாது. சாத்தானை மேற்கொள்ள ஒரே வழி நம்மை முற்றிலுமாய் மீட்டுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம் மட்டுமே. உங்களை முற்றிலுமாய் மீட்டுக்கொண்ட அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கிறது. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம், அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
(1யோ 1:7)
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
(1யோ 1:9)
பல நேரங்களில் சாத்தான் உன்னுடைய பாவங்கள் மிகவும் பெரியது, எனவே இதை இயேசு கிறிஸ்து மன்னிக்கமாட்டார் என்ற சந்தேகத்தை உனக்குள் கொண்டுவருவான். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மேல் விசுவாசம் வைக்கவேண்டும். நீங்கள் உங்கள் பாவங்களை அறிக்கை செய்யும் போது அவர் உங்களை மன்னிக்கிறார் என்றும், நீங்கள் அவருடைய இரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்படுகிறீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும். நாம் இயேசு கிறஸ்துவின் இரத்தத்தின் மேல் விசுவாசம்வைக்கும் போது சாத்தான் நம்மேல் குற்றம் செல்லமுடியாது. சாத்தான் உங்களை விட்டு ஓடிப்போவான். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டீர்கள் என்பதை விசுவாசியுங்கள். கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு, கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்லக்கடவர்கள்.
(சங் 107:2-3)
தாவீது சொல்லுகிறார் நாம் கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டோம் என்று சொல்ல வேண்டும். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டீர்கள் என்பதை அறிக்கை செய்யுங்கள். என்னுடைய வீட்டையும், என் முழுகுடும்பத்தையும் எல்லா சத்துருவின் கிரியைகளிலிருந்து காத்துக்கொள்ளும்படி அவரடைய இரத்தத்துக்குள்ளாக கொண்டுவருகிறேன் என்று சொல்லுங்கள். அவர் கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தி உங்களை மீட்டுக்கொண்டபடியினால் பாவம் உங்களை மேற்கொள்ள அதிகாரம் இல்லை. வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
(எபி 9:12)
நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். –
எபிரேயர் 12:22-24
ஆமேன்
