கனியுள்ள வாழ்க்கை

புது வருட செய்தி

" இந்த வருஷம் இருக்கட்டும், நான் இதை சுற்றிலுங்
கொத்தி எருபோடுவேன்
கனிகொடுத்தால் சரி,
கொடவிட்டால் இனிமேல் இதை வெட்டி
போடலாம். "
லூக்கா : 13 : 8 , 9

வரக்கூடிய வருஷத்தில்
நாம் கனிக் கொடுக்கும்
படி தேவன் எதிர்பார்க்
கிறார். கனி என்பது 
நல்ல பண்புகள் , 
குணாதிசயங்கள். தேவன் நம்மிடத்தில்
எதிர்பார்க்கும் கனி
எபி : 13 : 15. உதடுகளின் கனியாகிய
ஸ்தோத்திர பலி. 
பிலி : 1 : 10. நீதியின் கனி. கலா : 5 : 22ல்
ஆவியின் கனி என்று
சில கனிகளை நம்
வாழ்க்கையில், ஊழியத்தில் எதிர்பார்க்
கிறார். கனி கொடுப்ப
வர்களை ஊழியத்திற்கு
அழைத்திருக்கிறார்.
1 தீமோ : 1 : 12.
எபேசியர் : 4 : 12 , 13
சபையின் பகதிவிருத்தி
காக இந்த கனிதரும்
ஊழியத்தை தந்திருக்
கிறார். நமக்குள் கனி
நிறைந்த வாழ்வை
தேவன் எதிர்பார்கிறார்
அதற்காக அதை கொத்தி எரு போடுவேன். அதன் 
பொருள் உங்கள்
ஜென்ம சுபாவங்களை
மாற்றி, சூழ்நிலைகளை
மாற்றி உங்களை
ஆசிர்வதிப்பேன் என்று
வாக்குக் கொடுக்கிறார்.
வரும் நாட்களில் நாம்
கனியுள்ள வாழ்க்கை
நல்ல பண்புள்ள வாழ்கை தேவன் எதிர்
பார்க்கிறார். நாம் இதில்
மூன்று காரியங்களை
பார்க்கலாம்.

1. நம் வாழ்வில் கனி
    இல்லை என்றால்
    என்ன நடக்கும் : 

2. நம் வாழ்வில் கனி
    கொடுத்தால் என்ன
    நடக்கும் : 

3. நம் வாழ்வில் கனிக் 
    கொடுக்க என்ன 
    செய்ய வேண்டும்.

கனிக்கொடுக்கவில்லை என்றால் என்ன
நடக்கும்.

1. நம் வாழ்வில் கனி
    இல்லை என்றால்
    சாபம் வரும் : 
    மத் : 21 : 9
    தழைத்து செழித்துக்
    காணப்பட்ட அத்தி
    மரம் கனியில்லை.
    கனி இருக்கும் என்று
    எதிர்பார்த்து வந்த
    தேவனுக்கு ஏமாற்றம்.
    அவர் சபித்தார். பட்டுப்
    போயிற்று. தாவிது
    யுத்தகளத்தில் நிற்க
    வேண்டியவன் 
    உப்பிரிகையில் 
    உலாவினதால் பாவம்
    செய்தான். நம்முடைய
    இச்சையடக்கத்தை
    விட்டுவிட்டான். 
    அதனால் சாபத்தை
    சந்திக்க வேண்டிய
    தாயிற்று. உன் மகன்
    சாகவே சாவான்.
    நல்ல கனியை , நல்ல
    பண்பை இழந்ததால்
    தாவிதுக்கு சாபம். 
    மனதின் இச்சைபடி
    நடந்தால் நாம் நமது
    பண்பை இழந்து
    விடுவோம். கனியுள்ள
    வாழ்வுக்கு ஒப்புக்
    கொடுங்கள்

2. கசந்த கனி கொடுப்
    பாயானால் உன்
    வேலி எடுக்கப்படும்.
    ஏசாயா 5 : 4 , 5
    தேவன் நமக்கு மூன்று
    விதமான வேலியைத்
    தந்திருக்கிறார். இதை
   யோபு : 1 : 10 , 11.
   யோபுவை சுற்றியுள்ள
   வேலி , யோபுவின் 
   வீட்டை சுற்றியுள்ள
   வேலி , யோபுவுக்கு
   உண்டான எல்லா
   வற்றையும் சுற்றி
   வேலியிருந்ததால்
   சாத்தான் அவனிடத்
   தில் வரமுடியவில்லை
   நம்முடைய வுழ்வில்
   கனியில்லை என்றால்
   தேவன் உனக்கு
   கொடுக்கப்பட்ட வேலி
   எடுக்கப்படும். தேவன்
   கொடுத்த வாக்கு
   சகரியா : 2 : 5. நல்ல
   பண்புகளோடு நாம்
   கர்த்தரை ஸ்தோத்திரி
   கும்போது அவர் 
   மகிமை படுகிறார்.
   சங் : 50 : 23. 
   கனியில்லை என்றால்
   உனக்குரிய வேலி
   எடுக்கப்படும்.

3. நல்ல கனியில்லை
    என்றால் வெட்டப்பட்டு
   அக்கினியில் போடப்
   படும் சூழ்நிலை வரும்
   மத் : 7 : 19. நல்ல கனி
   யில்லை என்றால் 
   நமது வாழ்வின் முடிவு
   வெட்டப்பட்டு அக்கினி
   மில் போடுவார்கள். 
   நம்மிடத்தில் இருக்கும்
   கனியை வைத்துதான் 
   நமது வாழ்வு நியாய
   தீர்ப்பில் தீர்க்கப்படும். 
   நல்ல கனியுள்ள 
   வாழ்வு பரலோகத்தில்
   கொண்டுபோகும். 
   கனியற்ற வாழ்வு 
   அக்கினி நரகத்திற்கு
   கொண்டுபோகும்.

நம் வாழ்வில் கனிக்
கொடுத்தால் என்ன
நடக்கும் ; 

1. கனிக்கொடுத்தால்
    தேவன் மகிமைப்
    படுவார்.
    யோவான் : 15 : 8
    நாம் கனிக்
    கொடுக்கும் போது
    தேவன் மகிமை
    படுவார். நாம் இந்த
    உலகில் சிருஷ்டிக்கப் 
    பட்டது நம் தேவனை
    மகிமைப்படுத்துவதற்
    காக. 1 கொரி : 10 : 31
    1 பேதுரு : 4 : 11
    நாம் தேவனை 
    மகிமை படுத்தும்
    போது நாம் கனி
    கொடுக்கிறவர்களாய்
    இருப்போம்.

2. கனி நிறைந்தால் நம்
    ஜெபம் கேட்கப்படும்
    யோவான் : 15 : 16
     நம்முடைய வாழ்வில்
     கனிநிறைந்த வாழ்வு
     நம்முடைய ஜெபத்
     திற்கு பதில்
     கொடுக்கும். 
     தானியேல் இச்சை
     அடக்கமாயிருந்து 
    போஜனத்திலும் தீட்டு
    படாதபடி தன்னைக்
    காத்துக்கொண்டு
    தனது கனியை
    வெளிப்படுத்தினான்.
    ஆகவே அவன் ஜெபம்
    தேவதூதனை இறங்க
    வைத்து அவர் 
    சொன்னது 
    " நீ மிகவும் பிரியமான
    வன். நீ வேண்டிக்
    கொள்ள தொடங்
    கியவுடன் கட்டளை
    வெளிப்பட்டது.
    தானி : 9 : 23. கனி
    யிருந்தார் உங்கள்
    ஜெபம் கேட்கப்படும்.

3. நீங்கள் மிகுந்த கனிக்
    களை கொடுப்பதால்
    என் பிதா மகிமைபடு
    வார் எனக்கும் 
    சீஷராய் இருப்பீர்கள்
    யோவான் : 15 : 8
    நாம் கனிக்கொடுக்
    கும்போது இயோசு
    வுக்கே சிஷர்களாய்
    மாறுகிறோம்.
    அப் : 11 : 26 : 
    யோவா : 13 : 35 : 8:31

நம்முடைய வாழ்வில் கனி தர என்ன செய்ய
வேண்டும்.

1. கர்த்தரிடத்தில் நம்பிக்
     கையாய் இருக்க
    வேண்டும் :
    ஏரே : 17 : 7 , 8.
    அவரே நமக்கு நம்பிக்
    கையின் வாசல். உன் 
    நம்பிக்கை அவரில்
    இருக்கும்வரை உன்
    கனி உனக்குள் 
    நிலைத்திருக்கும்.

2. நாம் கனிதர 
    கர்த்தரின் வார்த்தை
    யை நேசிக்கவும்
    தியானிக்கும் 
    வேண்டும்
    சங் : 1 : 2 , 3
   வேதத்தை நேசித்து
    அதை தியனிக்கும்
    போது நாம் கனியுள்ள
    வாழ்கை வாழ முடியும்

3. கனி தர  பரத்தில்
    இருந்து வரும் 
    ஞானத்தினால்
    நிறைய வேண்டும் : 
    யாக்கோபு : 3 17
    தேவ ஞானம் நம்மை
    கனியுள்ளவர்களாய்
    மாற்றுகிறது.

4. கனி நிறைந்த 
    வாழ்வுக்கு நாம்
    நம்முடைய ஆலயத்
    தில் நாட்டப்பட
    வேண்டும் : 
    சங் : 92 : 13 , 14 , 15
    கனியுள்ள வாழ்வு
    காணப்பட நாம் நமது
    ஆலயத்தில் நாட்டப் 
    பட்டிருக்க வேண்டும்.
    ஆலயத்தில் நமது
    வாழ்வுக்குரியவைகள்
    போதிக்கபடுகிறது.
    நாம் ஆலயத்தில்
    நாட்டப்பட்டவர்களாய்
    இருந்தால் நமக்கு 
    கனி தரும் வாழ்வு
    கிடைக்கும்.

5. கர்த்தரில் நிலைத்
    திருந்தால் மிகுந்த
    கனிகளைக்
    கொடுப்போம்.
    யோவான் 15 : 5 
    நாம் கனிக் கொடுக்க
    வேண்டும் என்றால்
    அவருக்குள் நிலைத்
    திருக்க வேண்டும்.
    அவருக்குள் நிலைத்
    திருப்பது மேன்மை
    யான ஒன்று. நிலைத்
    திருக்கும் போது நமது
    ஜென்ம சுபாவங்கள்
    மற்றும் அவருக்கு
    பிரியமில்லாத 
    பழக்கம் எல்லாம் 
    மாற்றி அவர் கனி
    யுள்ள வாழ்வை
    நமக்கு கொடுப்பார்.
    கிறிஸ்துவுக்குள் 
    நிலைத்து கனி தரும்
    வாழும் வாழ்க்கையை
    வாழ்ந்து காட்டுங்கள்.

பிரியமானவர்களே ! 
ஒரே வாழ்வு. அது கனி
தரும் வாழ்வாக வாழ
அவரிடத்தில் நம்மை
ஒப்புக்கொடுத்தார்.
கர்த்தர் நமக்கு கனி
தரும் வாழ்வை 
கொடுப்பாயாக !