ஞானவான் ..
ஞானவான் ..
ஞானவான் ..
1. எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன், ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள் .
சங்கீதம் 107:43
2. ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்: மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.
நீதிமொழிகள் 3:35
3. ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள் , மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.
நீதிமொழிகள் 10:14
4. ஞானவான்களுடைய போதகம் ஜீவ ஊற்று : அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்;.
நீதிமொழிகள் 13:14
5. மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு: ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.
நீதிமொழிகள் 14:3
6. பரிகாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான். ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.
நீதிமொழிகள் 21:11
7. வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு : மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.
நீதிமொழிகள் 21:20
8. ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும் , அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
தானியேல் 12:3
9. அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள். துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள். துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்துகொள்வார்கள்.
தானியேல் 12:10
================== ஞானமுள்ளவன் ..
1. ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,
எபேசியர் 5:15
2. கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.
2 தீமோத்தேயு 3:15
3. ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்: அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.
நீதிமொழிகள் 24:5
4. இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான் ; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும்.
நீதிமொழிகள் 16:21
5. ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம், ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
நீதிமொழிகள் 16:14
6. ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான் ; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.
நீதிமொழிகள் 15:20
7. ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்: மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.
நீதிமொழிகள் 14:16
8. ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான் : பரிகாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான்.
நீதிமொழிகள் 13:1
9. பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு: ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம் .
நீதிமொழிகள் 12:18
10. நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்: ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்கிறவன் ஞானமுள்ளவன்.
நீதிமொழிகள் 11:30
