🔥பிதாவின் நாமம்!🔥

💥நமக்கு முன்னோடினவராகிய கர்த்தர் இயேசு சீஷர்களுக்கு ஜெபம்பண்ணவேண்டிய விதத்தை கற்று கொடுக்கும் போது, பிதாவின் நாமத்தை பரிசுத்தப்படுவதாக என சொல்லி ஜெபிக்க கற்று தந்தார்.*

👑மத்தேயு 6:9 நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;

தேவனை சேவித்த மனிதர்களும் இவ்வாறே சொல்லி வந்தனர்! இங்கு எலிசபெத்து சொல்லுவதை கவனிப்போமாக!

👑லூக்கா 1:49 வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.

💥அவருடைய நாமம் என்ன?

👑ஏசாயா 42:8 நான் கர்த்தர்,  இது என் நாமம்;  என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

👑யாத் 3:15 மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம்,  தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.


👑யாத்திராகமம் 15:3 கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.


 🍇அந்த நாமம் பரிசுத்தமுள்ளது.  ஆகவே தான் அவர் நாமம் பரிசுத்தபடுவதாக என குமாரன் கற்றுகொடுத்தார்(மத்6:9)!

🍇கர்த்தர் நாமத்தில் செய்யப்படும் எந்த கிரியையும் அவர் கட்டளையிட்டவாரே செய்தாக வேண்டும்! அது யாராக இருந்தாலும் சரி! பட்சபாதமே இல்லை!

🍇மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன் என தேவனால் சாட்சி பெற்றவன். லட்சோப லட்ச இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தி வந்த ஆரோன் மற்றும் மோசேவிடம் கர்த்தர் கன்மலையை பார்த்து பேச சொன்னார்.

👑எண் 20:8 நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார்.

🔥ஆனால் மோசே செய்தது என்ன?

👑எண் 20:11 தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது.

🔥இவ்வாறு மோசே செய்தது சரியா?  கர்த்தரே அதைக்குறித்து சொல்வதை கவனிப்போமாக!

👑எண் 20:12. பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி,  நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.

🍇கர்த்தருடைய நாமத்தை மோசேயும் ஆரோனும் தங்கள் அவிசுவாச கிரியையினால் பரிசுத்த படுத்தாததை(கர்த்தர் கட்டளையிட்டபடியே விசுவாசத்துடன் கிரியை நடப்பித்தல்) மேலுள்ள வசனத்தில் தேவனாகிய கர்த்தர் சுட்டி காட்டுகிறார் பாருங்கள்!

மேலும் சத்திய வேதம் சொல்லுகிறபடி,

👑லூக் 1:49. வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.

👑சங்கீ111:9 அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது.

💥நம் தேவன் பரிசுத்தமுள்ளவராகையால் எவ்வளவு கண்டிப்புள்ளவர் என்பதை கவனியுங்கள்!

🔥இஸ்ரவேலரின் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள் என்று மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளை கொடுத்தவர் அவர்கள் ஒரு சிறு மாற்றத்துடன் கன்மலையைப் பார்த்துப் பேசாமல் அதை அடித்ததினிமித்தம் லட்சோப லட்ச இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தியும் கானானுக்குள் செல்லும் பாக்கியம் மறுக்கப்பட்டு அந்த வாய்ப்பை இழந்தனர்!

💥இதை தியானிக்கும் போது மிகுந்த பயமும் நடுக்கமும் உண்டாகிறது!

💥தேவன் பட்சபாதமுள்ளவர் அல்ல என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் காட்ட முடியும்?
 நாம் கர்த்தருகென்று செய்யும் ஒவ்வொரு செயல்களிலும்
💥அவருக்கு அப்படியே கீழ்படிவதின் மூலம் அவரது நாமத்தை பரிசுத்தப்படுத்துகிறோம்!

💥தேவன் நம்மை பார்த்து கேட்கிறார்!  கவனியுங்கள்!

👑ஏசாயா 48:11 என்னிமித்தம், என்னிமித்தமே அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்?  என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.

✅மேலும்............

👑I பேதுரு 1:17 அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால்,  இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.

🍇எனவே நாம் வேத வாக்கியங்களை உற்று கவனிக்கையில் கர்த்தர் என்பது தேவனின் நாமமாக இருக்கிறது என்பதையும் அவரது நாமம் ஒன்றே மகிமைக்குரிய நாமம் என்றும் அறிகிறோம்!

👑ஏசாயா 42:8 நான் கர்த்தர்,  இது என் நாமம்;  என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

👑ஏசாயா 48:11 என்னிமித்தம், என்னிமித்தமே அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்?  என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.

👑சங்கீதம் 29:2 கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

👑I நாளாகமம் 16:29 கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

👑I நாளாகமம் 16:28 ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;  கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

👑சங்கீதம் 29:1 பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;  கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

🍇தேவன் தமது தயவுள்ள சித்தத்தின் படி பழைய ஏற்பாட்டில் தனக்கென்று ஒரு ஜனத்தை(இஸ்ரவேல் புத்திரர்) தெரிந்து கொண்டார்.  அவர்களை தன் ஜனம் என அழைத்தார்.

👑யாத்திராகமம் 3:10 நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.

👑I சாமுவேல் 9:17 சாமுவேல் சவுலைக் கண்ட போது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன் தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார்.

ஆகவே, தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கு தமது நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக எருசலேமில் சாலமன் மூலமாக ஒரு ஆலயத்தை கட்டுவித்தார்.

👑II சாமுவேல் 7:13 அவன்(சாலமோன்) என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.

👑I இராஜாக்கள் 5:5 ஆகையால்: நான் உன் ஸ்தானத்தில் உன் சிங்காசனத்தின்மேல் வைக்கும் உன் குமாரனே என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதினிடத்தில் சொன்னபடியே,  என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன்.

🍇இங்கு சாலோமோன் ஆலயத்தை கட்டியதை பார்க்கிறோம்!

👑I இராஜாக்கள் 9:3 கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்.

🍇இப்படி  கர்த்தர் என்ற தமது நாமம் மகிமைபடும்படி சாலோமோன் கட்டின ஆலயத்தை பார்த்து  இயேசு சொல்வதை கவனியுங்கள்:

👑யோவா 2:19-21 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.
👑20. அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே,  நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்.
👑21. அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.

🍇ரோமர்கள் வந்தபோது அப்படியே அந்த ஆலயம் ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடி இடிக்கப்பட்டதை நாம் அறிவோம்.

மேலும் இயேசு தன் சரீரத்தை குறித்து ஆலயம் என்றும் பேசினார். மேலும் கர்த்தர் என்ற நாமம் ஜீவனுள்ள ஆலயமான குமாரன் இயேசுவுக்கு பிதாவாகிய  ஆவியான தேவன் தம்முடைய மகிமைக்கேதுவாக கொடுத்தார். எனவே பிதா கர்த்தர் இயேசு என்ற தமது நாமத்தை இக்கடைசி நாட்களிலே வெளிப்படுத்தி குமாரன் மூலமாக திருவுளம்பற்றினார்! ஆமென்!

💥இது எப்படி நடந்து?


👑யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.

மேற்கண்ட வசனம் சுய நாமத்திற்கும் பிதாவின் நாமத்திற்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக விளக்குகிறது.

✅மேலும்.........

🍇எப்படியெனில் தேவ ஆவியானவராகிய பிதா அவருக்குள் பரிபூரனாமாக வாசம் செய்து தனது குமாரனை(மாம்ச சரீரத்தை) பலியிட்டு இவ்வுலகத்தை தனக்கு ஒப்புரவாக்கிக் கொண்டார்!  அல்லேலுயா!

👑கொலோ 2:9 ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது

👑யோவா 14:10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?  நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.

🍇மேலும் ஜீவனுள்ள ஆலயமான குமாரன் இயேசுவுக்கு ஆவியான கர்த்தர்(பிதா)  இயேசு என்ற தமது நாமத்தை இக்கடைசி நாட்களில் வெளிப்படுத்தி சுதந்தரமாக கொடுத்தார்.
இப்படியாக,  தேவன் கொடுத்ததை குமாரன் சுதந்தரித்துக்கொண்டதை கீழுள்ள வசனத்தில் காணலாம்!

👑எபிரே 1:4. இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.

👑லூக் 2:21. பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே
தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.

💥இயேசு என்ற நாமம் நாம் நினைப்பது போல் சாதாரண நாமம் அல்ல!

💥அது பிதாவின் நாமமாகும்! தன் நாமத்தையே தனது குமரனுக்கு கொடுத்தார்!

💥ஆகவே தான் இந்த நாமம் எல்லா நாமத்துக்கும் மேலான நாமமாக உள்ளது. அல்லேலுயா!

👑பிலிப்பியர் 2:11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக  இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், *எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்

மேலும்,  குமாரன் இயேசு பிதாவிடம் கேட்பதை கவனிப்போமாக!

👑யோவா 12:28. பிதாவே,  உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன்,  இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.

💥இன்னும் மகிமை படுத்துவேன் என்றவர் தமது நாமத்தை மகிமைபடுத்தினார்!  கவனியுங்கள்!

👑அப்போஸ்தலர் 19:17 இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்;  கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது.

🍇இப்படி கர்த்தராகிய இயேசு குமாரனாக மாசற்ற இரத்தம் சிந்தி மீட்க்க  இரண்டாம் ஆதாமாக பரிபூரண மனிதனாகவும் ஆவியில் தேவனான பிதாவாகவும் வெளிப்பட்டார்!

💥அன்பானவர்களே, இதுதான் தேவபக்திக்குரிய இரகசியமாகும்!

👑1 தீமோ 3:16. அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது.
தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்,   ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார்,  உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார்,  மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.

💥அது மாத்திரமல்ல,  பிதாவுக்கும் கிறிஸ்த்துவுக்குமுள்ள இரகசியமாகும்!

👑லோசெயர் 2:2 அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன்

💥இதைதான் அப்போஸ்தலன் யோவான் தனது நற்செய்தி நிருபத்தில் எழுதும் போது,

👑யோவான் 17:3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும்  நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

💥கிறிஸ்த்துவை பற்றியவை இரகசியம் என்பதால்............

👑கொலோசெயர் 4:3 கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,

💥இவ்வசனத்தில் கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் என குறிப்பிடும் பவுல், அதை பேசவேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதாக கூறுகிறார்!

💥அன்பானவர்களே, நாம் கிறிஸ்த்துவை எப்படி அறிந்துள்ளோம்?

💥வெறும் குமாரன் என்று மட்டுமே அறிந்து அவர் தேவனில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோமா?

💥கிறிஸ்த்து இரண்டாம் தேவன் என்று விசுவாசித்து கொண்டு இருக்கிறோமா?

💥வேதம் இவரை  எல்லா சிருஷ்டிகளுக்கும் முந்தினவர் என்பதால் நித்திய பிதா என்றும் இம்மானுவேல் என்றும் நம் ரட்சகர் என்றும் இன்னும் ஏராளமான பெயர்களில் வெளிப்படுத்தியுள்ளது.

👑சகரி14:9. அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.

👑கர்த்தராகிய இயேசு என்பதே அந்த நாமம் அல்லேலுயா!


சத்தியத்தை அறிவோம்! சத்தியம் நம்மை விடுதலையாக்கட்டும்! ஆமென்!🙏🙏🙏🙏🙏