இயேசு உயிரோடு இருக்கிறார். அல்லேலூயா...

உபத்திரவத்தின் குகை (Furnace of affliction).

கர்த்தர் நம்மை தெரிந்து கொண்ட விதம் மிகவும் சிறப்பானது...
 உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.
ஏசாயா 48:10

இயேசு கிறிஸ்து நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டார். ஏசாயா53:4 அதே நேரம் தேவனுடைய பிள்ளைகளுக்கு துன்பம், உபத்திரவம் உண்டு. இயேசு சொன்னார்.. "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் (Tribulation) உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள் , நான் உலகத்தை ஜெயித்தேன். என்றார்.
யோவான் 16:33"

இயேசுவும் இதற்கு விதிவிலக்கல்ல.. பிதாவாகிய தேவன் இரட்சிப்பின் அதிபதியாகிய இயேசுவை உபத்திரவத்தினாலே பூரணராக்கினார் என்று எபிரெயர் 2:10 ல் வாசிக்கிறோம்.

தாவீது சொல்லுகிறார்.. நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது , அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
சங்கீதம் 119:71

உபத்திரவத்தினால் என்ன பயன்? Outcome of tribulation

 1) பரலோகம் செல்ல உதவுகிறது... (To Enter Kingdom of Heaven)

நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
அப்போஸ்தலர் 14:22

 2) பொறுமையை தருகிறது. Affliction gives Patience.
ரோமர் 5:3

 3)பூரணப்படுத்துகிறது
Perfect. எபிரெயர்2:10

 4)வசனங்களை கற்று கொள்ள உதவுகிறது. சங்கீதம்119:71

 5)வெள்ளை அங்கி பெற உதவுகிறது. Cloth with white robes in heaven வெளிபடுத்தல்7:9-14

 6) நித்திய கனமகியை தருகிறது (Eternal weight if glory). 2கொரிந்தியர்4:18

இத்தனை மேற்சொன்ன ஆசீர்வாதங்கள் பெற உபத்திரவத்தின் வழியாக கண்டிப்பாக சென்று தான் ஆக வேண்டும். இலேசான உபத்திரவம் தான். ஆனால் ரிசல்ட் பெரியது.

 அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம்
2 கொரிந்தியர் 4:17

 இயேசு உயிரோடு இருக்கிறார். அல்லேலூயா...