உணர்ந்தேன் 🤷‍♂
எழுதுகிறேன் ✍

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயம் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்திடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்திடு பாப்பா.
👆
👉 இன்று புரட்சி பாரதி யின் நினைவு நாளாம்.

💁 பாரதியார் தன் வாழ் நாட்களில் நீதி, நியாயம், உண்மை, சமத்துவம், விடுதலை, பகுத்தறிவு இவைகளுக்காக தன் சொந்த இனத்தினர், மதத்தினர் மத்தியில் தைரியமாக தன் கருத்துக்களை பேசி, புரட்சியாளராக வாழ்ந்தார்.

💁‍♂ வேதத்தை சரியாக ஆராய்ந்து பார்க்கையில்
 இயேசு கிறிஸ்துவும் தன் ஊழிய நாட்களில், நியாயப்பிரமாணத்தை இம்மியளவும் விடாமல் வலியுறுத்திய தன் இனத்தாருக்கு புரட்சியாளராகவே காணப்பட்டார் எனத் தெரிகிறது.
👇
👉 உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்.
👉 உங்களில் பாவமில்லாதவன் முதலாவது இவள் மீது கல்லெறியட்டும்.
👉 ராயனுடையதை ராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் கொடுங்கள்.
👉 வாய்க்குள் போவது தீட்டல்ல, வாய்க்குள்ளிருந்து வெளியே வருவதே தீட்டு.
👉 மனிதனுக்காகத் தான் ஓய்வு நாளேத் தவிர, ஓய்வு நாளுக்காக மனிதன் அல்ல.
👉 பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்.
👉 தன்னை வெறுத்து, சிலுவை சுமந்து என் பின்னே வாருங்கள்.
👉 தேவாலயத்தில் சாட்டையடி, பாவியான மனிதர்களோடே சிநேகம்.
👉 சமாரிய ஸ்திரியிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டது.
👉 சீஷர்களின் கால்களை கழுவினது.
👉 குஷ்டரோகியைத் தொட்டு சுகமளித்தல்.
👉 உதிரப்போக்கு உள்ள ஸ்திரி தன்னை தொடுவதற்கு அனுமதித்தல்.
👉 பல ஐசுவரியவான்கள் மத்தியில், இரண்டு காசு காணிக்கை போட்ட ஏழை விதவையை பாராட்டியது.
👆
🤷‍♂ இப்படி (நிறைய சொல்லலாம்) இயேசு கிறிஸ்து பேசினதும், செய்ததும் அந்த நாட்களில் புரட்சியானவைகளே!
மாத்திரமல்ல, மத்தேயு 23ம் அதிகாரம் முழுவதும் அன்றைய தேவ ஊழியர்களுக்கு எதிரான, தைரியமான, புரட்சிகரமான வார்த்தைகளே!

🔥📖🔥
இன்றைய கிறிஸ்தவத்திலும், ஆவிக்குரிய புரட்சி அர்ப்பணிப்பாளர்களின் (புரட்சி பாரதிகள்) தேவை அதிகமாகவே உள்ளது.