பின்மாற்றத்திற்கான
காரணங்கள் ?
ஜெபத்தில் குறைவு நீதி 16.18

 2 வேதம் வாசிப்பதில் குறைவு 2தீமோ2.15

3ஆலயம்செல்வதில் குறைவு  எபி10.25

4ஆவியாணவருக்கு கீழ்படிவதில் குறைவுஎபே4.30

5தேவனை அறிக்கையி டுவதில் குறைவு மத்10.33

 6அவரோடு நடப்பதில் குறைவு 1யோ1.7


மாண்ட்பிளங்க் பேனாக்கள் உலகப்புகழ்பெற்றவை. இரு நாடுகளின் தலைவர்கள் கூடி ஒப்பந்தங்கள் செய்யும்போது இக்கம்பெனியின் பேனாக்களே கையெழுத்திட அதிகமாய் பயன்படுத்தப்படுகின்றன. ஜான்கென்னடி, மார்கிரட் தாட்சர், தலாய்லாமா போன்றோர் பயன்படுத்திய இந்த பேனா அந்தஸ்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆகவே இந்த பேனாவைப் போலவே காட்சியளிக்கிற போலிகளை தயாரிக்கிற அநேக நிறுவனங்கள் வந்துவிட்டன. அதனால் வாடிக்கையாளர்கள் போலிகளை இனம் காண அநேக குறிப்புகளை அந்நிறுவனத்தார் வெளியிட்டனர். இதுபோன்ற போலிகள் உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சாத்தான் கூட போலிகளுக்கு பெயர் போனவன். அவன் ஒளியின் தூதனுடைய வேஷத்தை தரித்துக்கொள்வதாக வேதத்தில் வாசிக்கிறோம். உதாரணத்திற்கு, கிறிஸ்துவின் போதனைகள் போலவே தோன்றும் கள்ளப் போதனைகள் அநேகம் உண்டு. இவைகளைக் கொண்டு பிசாசானவன் அநேகரை வஞ்சித்து வருகிறான். இக்கடைசி நாட்களில் வஞ்சிக்கிற போலியான உபதேசங்களை இனம் கண்டுகொள்வது ஒவ்வொரு விசுவாசிக்கும் அவசியமாகும்.

இப்படி கள்ள உபதேசங்களும், துர்உபதேச கூட்டங்களும் அநேகமாயிருந்தாலும் அவைகளின் அடிப்படை உபதேசங்களில் சில ஒற்றுமைகள் காணப்படும். அவைகளை தெரிந்துகொண்டால் ஒரு விசுவாசி வஞ்சிக்கப்படாமல் தன்னைக் காத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனை மறுதலிப்பது அநேக கள்ள போதனைகளின் அடிப்படையாயிருக்கிறது. பிதாவையும், குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திகிறிஸ்து என்று 1யோவான் 2:22ல் வாசிக்கிறோம்.                                      திரித்துவத்தை மறுதலிப்பது மட்டுமல்ல, இயேசு கிறிஸ்துவை பிதாவுக்கு சமமானவர் என்று கூறாமல் சிருஷ்டிக்கப்பட்ட தூதர் என்றும் கூறுவர். மேலும் அநேக கள்ள உபதேசங்களில் காணப்படும் ஒரு அம்சம் நரகத்தை மறுதலிப்பதாகும். “ஜீவ புஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்”, என்று வெளிப்படுத்துதல் 20:15ல் தெளிவாய் சொல்லப்பட்டதை மறுதலித்து, அன்புள்ள தேவன் யாரையும் எரிகிற நரகத்தில் தள்ளமாட்டார் என்றும் சொல்லுவர்.

பிரியமானவர்களே! போலி உபதேசங்களை குறித்து கவனமாயிருந்து உங்கள் ஆத்துமாக்களை காத்துக்கொள்ளுங்கள்.

ஆமென் அல்லேலூயா!.